ஜூலை 20-ல் குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு: விண்ணப்பதாரர்களின் விபரங்கள் வெளியீடு

ஜூலை 20-ல் குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு: விண்ணப்பதாரர்களின் விபரங்கள் வெளியீடு
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 1 முதல் நிலை எழுத்துத் தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் வெ.ஷோபனா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 79 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வை ஜூலை 20-ம் தேதி நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன. சரியான விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

சரியான முறையில் விண்ணப் பங்களைப் பதிவு செய்து, உரிய கட்டணங்களைச் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரம் இணையதளத்தில் இல்லை யெனில், அந்த விண்ணப்பதாரர் பணம் செலுத்தியதற்கான ரசீது நகலுடன், விண்ணப்பதாரரின் பெயர், குரூப் 1 பதவிக்கான விண்ணப்பப் பதிவு எண், விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி, வங்கிக் கிளை / அஞ்சலக முகவரி ஆகியவற்றின் விவரங்களுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இணையதளத்தில் வெளி யாகியுள்ள விவரங்கள் விண் ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புகை மட்டுமேயாகும்.

விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர் களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in