ராணிப்பேட்டையில் அதிகரிக்கும் டெங்கு: வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை முறையாக மூடி வைக்க அறிவுறுத்தல்

ராணிப்பேட்டையில் அதிகரிக்கும் டெங்கு: வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை முறையாக மூடி வைக்க அறிவுறுத்தல்
Updated on
2 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் 67 பேருக்கு டெங்கு பாதிப்பு. வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை முறையாக மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் பொழுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேசமயம் மாலை மற்றும் காலை நேரத்தில் பனிப்பொழிவும் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளன. இருவேறு காலநிலைகளின் காரணமாக மக்கள் சளி, இருமல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளன. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப் படுகிறது. மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அரக்கோணம், நெமிலி, வாலாஜா ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 67 நபர்கள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இதுவரை அரக்கோணம் அடுத்த நெமிலியைச் சேர்ந்த 2 பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர். தண்ணீரில் பரவும் இந்த வகை கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த கிராம மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீட்டில் தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை முறையாக மூடி வைக்க வேண்டும். முறையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 328 பேர், 2022-ம் ஆண்டு 350-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் சுகாதார துறை சார்பில் டெங்கு ஒழிக்க கொசு மருந்து தெளித்தல், வீடுகள் தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் கள் மூலம் ஆய்வு செய்தல், மாதந் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

மேலும், காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், எலும்பு வலிகள் என அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் துகிறோம். பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் நோயின் தீவிரம் அடைந்து பிறகு தான், அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். மேலும், நகரங்களை காட்டிலும், கிராமங்களில் வீடுகளில் பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள், குளியல் அறை தொட்டிகள் திறந்த நிலையில் உள்ளது. இது டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்திக்கு எளிதாகிறது. எனவே, தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை முறையாக மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தாத பழைய டயர், பிளாஸ்டிக் பொருட்கள், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் தேங்காய் மட்டைகளில் என தண்ணீர் தேங்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தாண்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் 67 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ளனர். 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மாறி வரும் பருவநிலையும், காய்ச்சல் பரவ ஒரு காரணமாக உள்ளது. டெங்கு ஒழிப்புக்கு மாவட்டம் நிர் வாகம் உத்தரவின்படி, சுகாதார துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என சுகாதார துறை அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு பாதிகள் தீவிரம் குறைய மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகா தார துறை இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in