ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் ‘ரெரா’ சட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய தமிழகம்

ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் ‘ரெரா’ சட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய தமிழகம்
Updated on
1 min read

ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை ஏற்று தமிழக அரசு அறிவிக்கையை வெளியிடாமல் இருப்பதால், இதை அமல்படுத்து வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மத்திய அரசு மே 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென்றால், அனைத்து மாநில அரசுகளும் சட்டத்தை ஏற்று அதற்கான அறிவிக் கையை தயாரித்து வெளியிட வேண் டும். இதுவரை மத்தியப் பிரதேசம், பிஹார், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே சட்டத்தை ஏற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளன.

‘ரெரா’ எனப்படும் இந்த சட்டம் அமலுக்கு வந்தால், ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப்படைத்தன்மை உருவாகும். வீடு வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும். குறிப்பிட்ட நாட் களுக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீட்டைக் கட்டி வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கவில்லை என்றால் இழப்பீடு வழங்கும் அம்சமும், சிறைக்கு செல்லும் அம்சமும் இந்தச் சட்டத்தில் உள்ளது. இது போன்ற பல அம்சங்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர். இந்த சட்டத்தால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்பதாலும், போலி கட்டுமான நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்பதாலும் கட்டுமான நிறுவனங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த சட்டம் குறித்த வரைவை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட தமிழக அரசு, இதுவரை நடை முறைப்படுத்தவில்லை. அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டால் மட்டுமே தமிழக வாடிக்கையாளர்களும், கட்டுமான நிறுவனங்களும் பயன்பெற முடி யும். அதேபோல ‘ரெரா’ சட்டத்தின் படி ரியல் எஸ்டேட் தொழிலை கண் காணிக்க கண்காணிப்பு ஆணையம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். இதுவரை மத்திய பிரதேசம் மட்டுமே ஆணையத்தை உருவாக்கி யுள்ளது. தற்போதைய நிலையில் தமிழக அரசு சட்டத்துக்கான அறிவிக்கையை வெளியிட்டாலும், கண்காணிப்பு ஆணையம் மற்றும் அதற்கான இணையதளம் இல்லா மல் செயல்படுத்த முடியாது. கட்டு மான நிறுவனங்கள் தங்களது கட்டு மான பணிகள் குறித்து அந்த ஆணையத்திலேயே பதிவு செய்ய வேண்டும். மேலும் வாடிக் கையாளர்களும் அங்கேதான் புகார் அளிக்க முடியும்.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கூறியதாவது:

ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின்படி கண்காணிப்பு ஆணையம் உருவாக்குவதற்கான அனைத்து கோப்புகளும் தயாராக உள்ளன. தற்போது தமிழக அரசு அவற்றுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரெரா சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்.

ரெரா இணையதளத்தை உருவாக்கித் தருமாறு சி.எம்.டி.ஏவை தமிழக வீட்டுவசதித் துறை கேட்டுக் கொண்டது. அதன்படி இணையதளம் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இணையதளத்தை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதுவும் கூடிய விரையில் நிறைவு பெற்றுவிடும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in