

தேமுதிகவினருக்கு அம்மா உப்பை பரிந்துரைப்பதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு மாதத்திலேயே 524 டன் அம்மா உப்பு விற்பனை செய்யப் பட்டதாக பேரவையில் அறிவித்த அமைச்சர் தங்கமணி, ‘‘தேமுதிக உறுப்பினர்கள் சிலருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் குறைந்த அளவு சோடியம் கலந்த உப்பை பரிந்துரை செய்கிறேன்.
“உப்பிட்டவரை (ஜெய லலிதா) நன்றியுடன் பார்க்கா விட்டா லும் பரவாயில்லை. ஆரோக்கியத்தையாவது அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்” என்றதும் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.