காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்பில் கழிப்பிடம் கட்டுவதில் மோசடி: தவிக்கும் கிராம மக்கள்

காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்பில் கழிப்பிடம் கட்டுவதில் மோசடி: தவிக்கும் கிராம மக்கள்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுவை அருகே இருளர் குடியி ருப்பில் கழிப்பிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியும், ஒப்பந்ததாரர் பணிகள் செய்யாததால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் இல்லை.திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சூழலை உருவாக்க, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கழிப்பிடம் கட்டித்தர அரசுநிதி ஒதுக்கீடு செய்து அனுமதிதந்தது.

இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகளை ஒப்பந்த தாரரிடம் ஒப்படைத்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, கழிப்பிடம் கட்டுவதற்கான பொருட்களை வாங்கி வைத்துவிட்டு சென்ற ஒப்பந்ததாரர் அதன்பிறகு பணிகளை செய்யவில்லை. இதைய டுத்து ஆட்சியர், எம்எல்ஏ ஆகியோரிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

கடந்த சில மாதங்கள் முன்பு ஆட்சியர் நேரில் வந்து பார்த்தார். அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டபோது, "டெண்டர் விட்ட ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டார். அதனால் இப்பணி நடக்கவில்லை" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், "கழிப்பிடம் கட்ட பொருட்கள் வந்தன. மண் வாங்கி வந்துவைத்தோம்.

ஆனால் கட்டவில்லை. எங்களிடம் பணம்தராமல் நாங்களே கட்டித்தரு கிறோம் என்று கூறி விட்டு தற்போது கட்டாமல் ஏமாற்றிவிட்டனர். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் நடக்கவில்லை. பகலில் குடிகாரர் தொல்லையும், இரவில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் தொல்லையாலும் கழிப்பிடம் இல்லாமல் பாதிப்பில் உள்ளோம்.

பொதுக் கழிப்பிடமாவது கட்டி தர வேண்டும்" என்றனர். ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கழிப்பிடம் கட்டித் தர அரசு நிதி ஒதுக்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in