

புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 27-ம் தேதி இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 90 பவுன் நகைகளை காணவில்லை. லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயசீலன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ஜெயசீலன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் அவரது மகன் தீபக்கின் நண்பர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. நண்பரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தனது நண்பர்களோடு சேர்ந்து நகைகளைத் திருடியது தெரிய வந்தது.
புதுச்சேரியில் தனியார் கல்லூரி யில் பிடெக் 2-ம் ஆண்டு படிக்கும் தீபக்கும் அவரது நண்பரும் பள் ளிக் காலத்தில் இருந்தே நெருங் கிய நண்பர்கள். தீபக்கின் வீட்டில் சாவியை மறைவிடத்தில் வைத்து விட்டுச் செல்வது தீபக்கின் நண்பருக் குத் தெரியும். இதைப் பயன் படுத்தி கடந்த 27-ம் தேதி யாரும் இல்லாதபோது 90 பவுன் நகை களை நண்பர் திருடிச் சென்றுள்ளார்.
இந்த நகைகளை தீபக்கின் நண்பர், அவருடன் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்களுடன் சேர்ந்து தீபக்கின் வீட்டில் திருடிய தும், அந்த நகைகளை நிதி நிறு வனத்தில் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸார் 5 பேரையும் கைது செய் தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகள், ரூ. 2.25 லட்சம் ரொக்கம், ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.