

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், தமிழகத்தில் எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
அரூரில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால், தமிழகத்தில் எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை.
செம்மலை கூறுவதை வைத்து கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பு வகிப்பவர் யார் என் பதை முடிவு செய்ய முடியாது. முதல்வர் யார் என்பதை 122 எம்எல்ஏ-க்கள் தான் முடிவு செய் வர். இரு அணிகள் இணைவதை யாராலும் தடுக்க முடியாது.
மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் முழுமையான அறிக்கை இன் னும் கிடைக்கவில்லை. மக்கள் அதிமுக அரசு பக்கம் இருக்கிறார்கள். மீண்டும் தேர்தல் வந்தாலும், அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.