Published : 23 May 2017 02:17 PM
Last Updated : 23 May 2017 02:17 PM

ரஜினி அரசியலுக்கு வரத்தேவையில்லை: சீமான்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை; ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் என சீமான் கூறினார்.

திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. தமிழினத்தின் பெருமையும், வரலாறும் தெரியாதவர் எதற்காக எங்களை ஆள வேண்டும்.

மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். அதற்காக நான் பச்சை மராட்டியன் என்று பறைசாற்றிக் கொள்ள முடியுமா?

ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x