லாரி மீது கார் மோதி துணை நடிகை உட்பட 2 பேர் பலி

லாரி மீது கார் மோதி துணை நடிகை உட்பட 2 பேர் பலி
Updated on
1 min read

ஓசூரில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் துணை நடிகை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் யஷ்வந்த் பூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா சிங். இவரது மகள் அனுஷா சிங்(20). பெங்களூரு அருகே உள்ள கெங் கேரி எம்.ஏ.புரா பகுதியைச் சேர்ந்த வர் பவானி(20). இருவரும் துணை நடிகைகள்.

இவர்கள் இருவரும் துபாயில் நடந்த தமிழ் திரைப்பட படப் பிடிப்பில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினர். அங்கிருந்து வாடகைக் கார் மூலம் பெங்களூருவுக்கு சென்றுகொண்டு இருந்தனர். காரை சென்னை மீனம்பாக்கம் அண்ணா தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(29) என்ப வர் ஓட்டிச் சென்றார்.

நேற்று அதிகாலை 5.30 மணி யளவில் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் தளி ஜங்ஷன் மேம்பாலத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

இதில், துணை நடிகை அனுஷா சிங், ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு துணை நடிகை பவானி ஓசூர் தனியார் மருத் துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in