Published : 17 Feb 2023 04:07 AM
Last Updated : 17 Feb 2023 04:07 AM

ஈரோடு கிழக்கில் வாக்காளர் பெயர், செல்போன் எண் விற்பனை? - அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களர் பட்டியலில் பெயர்கள் இருமுறை இடம்பெற்றது, வாக்காளர் பெயர், செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது போன்றவை தொடர்பாக, விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. திமுககூட்டணியில் காங்கிரஸ் மற்றும்அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சுயேச்சைகள் உட்பட 77 பேர் களத்தில் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோடுக்கு வருகைதந்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வீடு வீடாகச் சென்று,வாக்காளர் பெயர்களை சரிபார்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின் றனர்.

கண்காணிப்புக் குழு: இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில்,கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதிமுக, பாஜக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குறிப்பாக,8 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருமுறை இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பெயர், விவரம், செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய துணை தலைமை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ நேற்று முன்தினம்காணொலி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு,ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி உள்ளிட்டோருடன் இடைத்தேர்தல் கள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x