Published : 16 May 2017 08:32 AM
Last Updated : 16 May 2017 08:32 AM

பிளஸ் 1 பாடங்களை படிக்காத மாணவர்கள்: அதிக கட் ஆஃப் மதிப்பெண் பெற்றும் பொறியியல் படிப்பில் திணறும் பரிதாபம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை படிக்கும் மாணவர் கள் பொறியியல் படிப்பில் திணறு கிறார்கள். அடிப்படை கணித அறிவை மேம்படுத்தும் பிளஸ் 1 கணித பாடத்தைப் படிக்காததே இந்த அவல நிலைக்கு காரணம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.

பிளஸ் 2 தேர்வில் மிக அதிக மான மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பலரும் முதல் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.

பொறியியல் படிப்புக்கான அடிப்படை பிளஸ் 1 கணித பாடம் தான். பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அந்த வகுப்புக் குரிய பாடங்களை நடத்துவ தில்லை. மாறாக அடுத்த ஆண்டு வரவிருக்கிற பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கும் நோக் கில் பிளஸ் 2 பாடங்களை நடத்து கிறார்கள்.

ஒருசில பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்கள் பெயரளவில் நடத் தப்படும். 12-ம் வகுப்பு பாடங் களுக்கே முக்கியத்துவம் கொடுக் கப்படும். இவ்வாறு பிளஸ் 1 வகுப்புக்குரிய பாடங்களை நடத் தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நடத்துவதால் மாணவர்கள் அடிப் படை கணித அறிவு பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, அவர்கள் பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 அல்லது 199, 198 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தாலும் முதல் ஆண்டில் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

கணித பாடத்தில் அடிப்படை அறிவு கிடைக்காமல் செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைவ துடன் சிலர் தோல்வி அடைய வும் நேரிடுகிறது. பொறியியல் படிப்புக்கான அடிப்படை விஷ யங்கள் பிளஸ் 1 பாடங்களில் உள்ளன. பிளஸ் 1 பாடத்தை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடத்தை படித்ததன் காரண மாகவும், பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்ததாலும் மாண வர்கள் சிரமங்களுக்கு ஆளாகி றார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வின் மூலம் கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்புக்கு அடிப் படையான பிளஸ் 1 கணித பாடத்தை கடந்த 2015-ம் ஆண்டு பொறியியல் முதல் ஆண்டு செமஸ்டர் பாடத்திட்டத்தில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களை நடத்துவது தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது. ஓராண்டு படிக்க வேண்டிய பாடங்களை 2 ஆண்டுகள் படித் தால் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர உதவும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி யல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப் பெண் வாங்கிவிடலாம் என்ற ஆசையே இதற்குக் காரணம்.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் மாணவர்களை இதுபோன்ற சூழ லுக்கு தள்ளுவதால் அடிப்படை அறிவு பெறாமல் பட்டப் படிப்பில் அவர்கள்தான் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று ஆசிரியர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:

மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தைப் பொறுத்தவரையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் அடிப்படை கருத்துகள், கோட்பாடுகள் பிளஸ் 1 பாடத்திட்டத்தில்தான் இடம்பெற்றுள்ளன. பிளஸ் 1 தேர்வு சாதாரண தேர்வாக இருப்பதால் அதற்கான பாடங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. அதற்கு உரிய முக்கியத்துவமும் கொடுக்கப்படுவது கிடையாது. மாணவர்களும் சரிவர படிப்ப தில்லை.

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாதவரை, ஆசிரியர் களும் அந்த வகுப்புக்கான பாடங்களை ஒழுங்காக நடத்த மாட்டார்கள். அதேபோல் மாண வர்களும் சரியாக படிக்க மாட்டார்கள். பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டால் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள். ஐஐடி, நீட் போன்ற அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகிவிடுவார்கள்.

எனவே, இந்த ஆண்டே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் கூறியதாவது:

தற்போது அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக ளில் ஆந்திர மாணவர்கள் 16.6 சதவீதமும், மகாராஷ்டிரா மாணவர்கள் 6.5 சதவீதமும், கர் நாடக மாணவர்கள் 5.7 சதவீதமும், கேரள மாணவர்கள் 2.4 சதவீதமும், பிகார் மாணவர்கள் 2.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் வெறும் 0.6 சதவீதம் பேரே வெற்றி பெறுகிறார்கள்.

ஆந்திர மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அங்கு பிளஸ் 1 தேர்வு 1978 முதல் பொதுத் தேர்வாக இருந்து வருகிறது. நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் 50 சதவீதம் பிளஸ் 1 வகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு தேர்வு, சாதாரண தேர்வாக இருப்பதால் அதற்கு ஆசிரியர்களும் சரி, மாணவர் களும் சரி முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

பிளஸ் 1 தேர்வை பொதுத் தேர்வாக அறிவியுங்கள் என்று கடந்த 6, 7 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். பிளஸ் 1 தேர்வு பொதுத் தேர்வாகிவிட்டால், தற்போது நடைபெறுவது போன்று பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படாது.

பொதுத்தேர்வாக இருப்பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு பாடங்களை நன்கு படிப்பார்கள். இதனால், அகில இந்திய நுழை வுத் தேர்வுகளுக்கு தமிழக மாண வர்கள் தயாராகிவிடுவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x