

சென்னை: மின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களை 15 நாட்களுக்கு அகற்றுமாறு, கேபிள் ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கை: மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதால் மின் விபத்துகள் நேரிட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில் 15 நாட்கள் முன் அறிவிப்பு வழங்கி, கேபிள் டிவி வயர்களை அகற்றுமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், இது தொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள ஆய்வு செய்து, மின் கம்பங்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல், ஏதேனும் மின் விபத்துகள் நேரிட்டால், கள அலுவலர்களே பொறுப் பேற்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.