

முறையாக பயிற்சி பெற்று அலோபதி சிகிச்சை அளிக்கும் ஹோமியோபதி மருத்துவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக் கைகள் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள் ளது.
ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் மாநிலச் செயலாளர் பக்ருதீன் உயர் நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த மனுவில், “பிஎச்எம்எஸ் படித்து இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள ஹோமியோபதி மருத் துவர்கள் பல்வேறு இடங்களில் மருத்துவர்களாகப் பணிபுரிகின் றனர். ஹோமியோபதி மருத்து வர்கள் தேவைப்படும்போது ஆங்கில மருத்துவ முறைகளை யும் கையாள்கின்றனர். படிக்கும் போதே இதற்காக பயிற்சி பெறு கின்றனர். இதற்கு இந்திய மருத்து வக் கழகம் அனுமதி அளித்துள் ளது.
இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து அலோபதி சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்களை கைது செய்யக் கூடாது என நீதிமன்றங்கள் பல முறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், முறையாக பயிற்சி பெற்று அலோபதி சிகிச்சை வழங்கும் ஹோமியோபதி மருத் துவர்களை போலி மருத்துவர்கள் எனும் பெயரில் காவல் அதிகாரி கள் கைது செய்வதும், துன்புறுத் துவதும் தொடர்கிறது. எனவே, முறையான பயிற்சியுடன் அலோ பதி சிகிச்சை அளிக்கும் ஹோமி யோபதி மருத்துவர்களை துன் புறுத்தக் கூடாது என போலீ ஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் அமர்வில் விசா ரணைக்கு வந்தது. “முறையாக பயிற்சி பெற்று அலோபதி சிகிச்சை அளிக்கும் ஹோமியோபதி மருத்துவர்கள் மீது கைது உள் ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள் ளக் கூடாது. இந்த மனுவுக்கு 2 வாரங்களில் தமிழக காவல் துறை தலைவர் பதில் அளிக்க வேண்டும்” என நீதிபதி உத்தர விட்டார்.