

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு அரசியல் சாயத்தை பூசி சீரழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி ஆண்கள்அரசு மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வினா விடை வங்கி என ஓர் அறக்கட்டளையின் பெயரில் ஒரு விளம்பரத்தைஅமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ளார். பெரும்பாலான அரசு பள்ளிகளில் இது போன்ற மலிவான விளம்பரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
பள்ளி மாணவர்களுக்கு அரசியல் சாயத்தை பூசி சீரழிக்கும் முயற்சியே இது. உடனடியாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலையிட்டு இது போன்ற அரசியல் விளம்பரத்தை மாணவர்கள் மத்தியில் திணிப்பதை நிறுத்த தொடர்புடைய கல்வி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.