Published : 18 May 2017 07:32 AM
Last Updated : 18 May 2017 07:32 AM

ஆட்குறைப்பு என்ற பெயரில் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்: தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யும் பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

25 ஆயிரம் பேர் பாதிப்பு?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஐடி துறை, தற்போது சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்திய ஐடி துறை சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவை ஈடுகட்டும் வகையில் காக்னிஸன்ட், டிசிஎஸ் போன்ற பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. காக்னிஸன்ட் நிறுவனம் சுமார் 25 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்குவதாக புகார்கள் எழுந்தன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை நீக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது.

ஊழியர்கள் திடீர் பணிநீக்கத்துக்கு ஐடி பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வந்தாலும், வலுவான அமைப்போ சங்கமோ இல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் ஐடி ஊழியர் பணிநீக்கம் அதிகரித்ததையடுத்து ‘ஃபோரம் ஃபார் ஐடி’ என்ற அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்த பணிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து ‘ஃபோரம் ஃபார் ஐடி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக தொழிலாளர் துறையில் புகார் அளித் திருந்தனர். அதன் பேரில் காக்னிஸன்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஃபோரம் ஃபார் ஐடி அமைப்புச் சேர்ந்தவர்களுக்கு இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தொழிலாளர் துறை இணை ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. ஃபோரம் ஃபார் ஐடி அமைப்பின் பொது செயலாளர் வினோத், உறுப்பினர் கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வினோத் கூறும் போது, “காக்னிஸன்ட் நிறுவனம் அதிகள விலான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது ஊழி யர்களை பணிநீக்கம் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் தெரிவிக் கப்பட்டது. ஆனால் பணிநீக்கம் செய்யப் படுவது குறித்த ஆதாரங்களை காண்பித் தோம். மீண்டும் திங்கள்கிழமை பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

குறைந்த ஊதியத்தில் இளைஞர்கள்

பணிநீக்கம் செய்யப்படுவோர் அனை வரும் 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இவர்களை திடீரென பணிநீக்கம் செய்து விட்டு, படித்துவிட்டு புதிதாக வரும் இளைஞர்களை பணியில் சேர்க்கிறார்கள். அவர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்தால் போதும் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் சட்டவிரோத பணிநீக்கம் நிறுத்தப்பட வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் இது போல நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x