

திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதுவரை கண்டிராத வகை யில், முதல்வர் மற்றும் அதிகாரி களை அழைத்து மத்திய அமைச் சர் வெங்கய்ய நாயுடு சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். இது மாநில உரி மைக்கும், அரசியல் சட்டம் கூறும் கூட்டாட்சி தத்துவத்துக்குமே வேட்டு வைக்கும் நிகழ்வாகும்.
மத்திய உறவுக்கு கைகொடுப் பது வேறு, மாநில உரிமைகளை முழுவதுமாக அவர்கள் காலடி யில் வைத்து சரணாகதி அடை வது வேறு. இதன்மூலம் ‘ஆட்சி இருந்தால் போதும், இருக்கும் வரை லாபம்’ என்பது போன்ற நிலை உருவாகி, மற்ற மாநிலத் தினரின் கேலி, கிண்டலுக்கு தமிழகம் உள்ளாகி வருகிறது.
தருமபுரியில் ஆர்எஸ்எஸ் ஷாகா ஊர்வலங்களில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. இது திராவிட கொள்கை தத்துவத்துக்கு விரோதமானது.
மேலும், தமிழக இந்து சமய அறநிலையத் துறை மழைவேண்டி அதிகாரப்பூர்வமாக யாகங்கள் நடத்துவது மதச்சார்பின்மை தத்துவத்துக்கு முற்றிலும் எதி ரானது. இதை அமைச்சர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால் அறப்போராட்டங்களை தொடங்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.