

சோழவரம் அருகே ஓடிய ஆந்திர மாநில அரசு பேருந்தில் மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழந்தார். பயணிகள் 12 பேர் படுகாயமடைந்தனர்.
கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்று, பயணிகளுடன் நெல்லூ ருக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டுநர் குரவைய்யா ஓட்டினார்.
இரவு 1.30 மணியளவில், சோழ வரம் அருகே ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலையில் பேருந்து சென்ற போது, ஓட்டுநர் குரவைய் யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள் ளது. இதனால் பஸ்சின் இயக் கத்தை அவரால் கட்டுப்படுத்த முடியாததால் அழிஞ்சிவாக்கம் பஸ் நிறுத்தத்தின் மீது பஸ் மோதி நின்றது. இதில் பஸ்சில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஓட்டுநர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த 12 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.