

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக் கான பொதுப் பிரிவின் இரண்டாம் நாள் கலந்தாய்வில் 225 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான (எம்டி, எம்எஸ், டிப்ளமோ) கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடந்த மாற்றுத்திறனாளிகள் பிரிவு கலந்தாய்வில் 10 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனு மதிக் கடிதத்தை பெற்றனர். நேற்று முன்தினம் நடந்த பொதுப் பிரிவின ருக்கான முதல் நாள் கலந்தாய்வில் 374 பேர் கல்லூரிகளில் சேருவதற் கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.
இந்நிலையில் பொதுப் பிரிவின ருக்கான இரண்டாம் நாள் கலந் தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கலந்தாய்வில் பங் கேற்குமாறு 550 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 332 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். 218 பேர் கலந்தாய் வில் பங்கேற்கவில்லை. கலந்தாய் வில் 225 பேர் கல்லூரிகளில் சேரு வதற்கான அனுமதி கடிதத்தை பெற் றனர். 107 பேர் காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கடைசி நாள் கலந்தாய்வு இன்று பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. கலந் தாய்வில் பங்கேற்குமாறு 500 பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக் கான (எம்டிஎஸ்) கலந்தாய்வு நடை பெறுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 19 எம்டிஎஸ் இடங்கள் உள்ளன. எம்டிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 627 பேர் இடம் பெற்றுள்ளனர். கலந்தாய் வில் பங்கேற்குமாறு 40 பேர் அழைக் கப்பட்டுள்ளனர். இன்றுடன் முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைகிறது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதில் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள பட்ட மேற்படிப்பு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.