

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளி, எர்ணாகுளம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சிராப்பள்ளியில் இருந்து வரும் ஜூன் 3, 10, 17, 24-ம் தேதிகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06026) அதே நாளில் இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூர் வரும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜூன் 7, 14, 21, 28-ம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06025) அதேநாளில் மாலை 3.10 மணிக்கு திருச்சிராப்பள்ளி செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜூன் 3, 10, 17, 24-ம் தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06033) அரக்கோணம், காட்பாடி, கோயம்புத்தூர் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து வரும் ஜூன் 6, 13, 20, 27-ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06034) மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இதேபோல், எர்ணாகுளம் ராமேஸ்வரம் (06035), ராமேஸ்வரம் எர்ணாகுளம் (06036), சென்னை எழும்பூர் ஹூப்ளி (07323), எர்ணாகுளம் யஸ்வந்பூர் (06548), சென்னை சென்ட்ரல் மாட்கோன் (06055), கொச்சுவேலி சென்னை எழும்பூர் (06066), சென்னை எழும்பூர் கொச்சுவேலி (06065) உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (8-ம் தேதி) தொடங்குகிறது.