சென்னையில் 2 நாட்களில் 6500 தெருக்களில் கொசு ஒழிப்பு பணி

சென்னையில் 2 நாட்களில் 6500 தெருக்களில் கொசு ஒழிப்பு பணி
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மேயர் பிரியா தலைமையில் கடந்த 11-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் பிப்.12-ம் தேதி மட்டும் 2,919 தெருக்களில் கொசு ஒழிப்புப் பணிகள், மழைநீர் வடிகாலில் 250 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் (பிப்.13) தீவிர கொசுஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்றைய தினம்மழைநீர் வடிகாலில் 280 கிமீநீளத்துக்கு கொசுக் கொல்லி நாசினி தெளித்தும், 304 கிமீ நீளத்துக்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், நீர்நிலைகளில் 65.22 கிமீ நீளத்துக்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக 3,671 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு பிப்.12,13 ஆகிய 2 நாட்களில் 6,590தெருக்களில் கொசு ஒழிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 71 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர்இறைக்கப்பட்டு, நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது. சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in