

சென்னை: சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான 51-வது வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இணை ஆணையர் பொ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர், சைதாப்பேட்டை தேவி பொன்னியம்மன், தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை சுந்தரேஸ்வரர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் ஆதிகேசவப்பெருமாள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் உள்ளிட்ட 137 கோயில்களில் திருப்பணிகளை தொடங்க குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.