தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அரசின் நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித் துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ் தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக நடப்பாண்டில் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப் படுகிறது.

இத்திட்டத்தின்படி கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடத்தை பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். தேவால யத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளி நாட்டிலிருந்து எந்தவித நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது.

இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் www.bcmbcmw.gov.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இப்படி வத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ‘மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம், சென்னை-1’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in