

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தன் நண்பர் ஒருவருடன் லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச விமானம் ஒன்றில் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு வளர்ச்சி வரியம் அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ திங்களன்று வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு தொடர்புடைய வளாகங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.
இந்த ரெய்டுகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கார்த்தி குற்றம்சாட்டினார். மேலும் தன் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்றும் அப்போது கார்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.