சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரன்சின்ஹா சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஆக இருந்த டாக்டர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை பெருநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பால் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு நிறுவன முதன்மை விஜிலன்ஸ் அதிகாரியாக இருந்த டாக்டர் எம்.ரவி காவல் துறை தலைமையிடத்து ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக இருந்த சுனில்குமார் சிங் ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த இ.டி.சாம்சன் சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த எம்.வி.ஜெயகவுரி சென்னை மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த எஸ்.சரவணன் சென்னை பெருநகர காவல் ஆணையரக தலைமையிடத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த என்.மணிவண்ணன் மதுரை நகர துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் போக்குவரத்து கழக முதன்மை விஜிலன்ஸ் அதிகாரியாக இருந்த வி.ஜெயஸ்ரீ சேலம் போக்குவரத்து கழக முதன்மை விஜிலன்ஸ் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பி.கயல்விழி திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.துரை கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.மகேஷ்வரன் சென்னை சட்டம்-ஒழுங்கு ஏஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த திஷாமிட்டல் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சோனல் சந்திரா சிவில் சப்ளை எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிவில் சப்ளை எஸ்.பி.யாக இருந்த ஆசியம்மாள் சிறப்பு புலனாய்வுப்பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஆர்.சக்திவேல் எஸ்பிசிஐடி பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை நகர துணை ஆணையராக இருந்த பாபு சென்னை சிபிசிஐடி பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி இன்று வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in