

மதுரை: மதுரை திருமங்கலம் புதிய இரட்டைப் பாதை சோதனை ஓட்டத்தில் 2 பெட்டிகளுடன் கூடிய ரயில் இன்ஜினை 123 கி.மீ. வேகத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளனர்.
மதுரை -திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை 7 கி.மீ. தொலைவை மணிக்கு 123 கி.மீ. வேகத்தில் 6 நிமிடத்தில் கடந்தது. லோகோ பைலட்கள் ரவிசங்கர், முத்துக்குமார் ஆகியோர் ரயிலை இயக்கினர்.
இதேபோல, திருமங் கலம்- திருப்பரங்குன்றம் இடையே 11 கி.மீ. தூரத்தை லோகோ பைலட் அக்பர் அலி, உதவி லோகோ பைலட் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் 123 கி.மீ. வேகத்தில் 11 நிமிடத்தில் கடந்தனர். இந்த 4 லோகோ பைலட் களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் பாராட்டினார்.
இந்த சோதனை ஓட்டத்தில் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா, கட்டுமானப் பிரிவு செயலர் அதிகாரி குப்தா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.