

கோடை வெயில் வாட்டி வதைப் பதால் பள்ளிகள் திறப்பதை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சரிடம் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இள மாறன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், ‘தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி யைத் தாண்டியுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் சரும நோய்கள், மயக்கம் வருதல், அம்மை, கொப்புளங்கள் போன்ற நோய் பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தனர். இதுகுறித்து பரிசீலித்து நடவ டிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.