

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து விட்டு தேர்வில் கலந்துகொள்ளாத வர்கள் ஆகியோருக்காக ஜுன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வு ஜுன் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 6-ம் தேதி முடிவடையும்.
சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங் கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர் வெழுதிய தேர்வு மையங்கள் வழி யாகவும் நேரில் சென்று மே 29 முதல் ஜுன் 1-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையங்கள் (Browsing Centre) மூலம் விண்ணப்பிக்க இயலாது. தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆகியவற்றை சேர்த்து பணமாக செலுத்த வேண்டும்.