Published : 13 Feb 2023 04:03 AM
Last Updated : 13 Feb 2023 04:03 AM

மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கட்சிகளுடன் இணைந்து அமமுக பணியாற்றும்: தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

தருமபுரி: தருமபுரியில் அமமுக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் இல்ல துக்க நிகழ்வுக்கு ஆறுதல் தெரிவிக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தருமபுரி வந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னம் கோரி உச்ச நீதி மன்றம் சென்றிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால், அதற்கான அவகாசம் இல்லாததால் அந்த முயற்சியை தவிர்த்து விட்டோம்.

இரட்டை இலை இன்று தவறானவர்கள் கையில் இருக் கிறது. எனவே, அந்த கட்சிக்கும் இடைத் தேர்தலில் ஆதரவு இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக-வுக்கும் ஆதரவு இல்லை. 90 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சி இது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பண நாயகம் வெல்லும் சூழல் இருந்தால் ஜனநாயகத்துக்கு இடமில்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-வை வீழ்த்த விரும்பும் கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அந்த அணியில் இணைந்து நாங்களும் பணியாற்ற முன்வருவோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது.

அதேபோல, தமிழகத்தில் மலிந்து கிடக்கும் போதை பொருட்களால் மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநராக்கியிருப்பதை வரவேற்கிறோம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x