

கோடையில் மின்வெட்டை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து 632 மெகாவாட் மின் சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள் ளது.
தமிழகத்தின் மொத்த மின்சாரத் தேவை ஆண்டுக்கு 91,642 மில்லியன் யூனிட்களாகும். சுமார் 34,253 மில்லியன் யூனிட்கள் சொந்த மின் உற்பத்தி மூலமும், 30,534 மில்லியன் யூனிட்கள் மத்திய அரசின் மின்நிலையங்கள் மூலமும், 6,082 மில்லியன் யூனிட்கள் மரபுசாரா எரிசக்தி மூலமும் பெறப்படுகின்றன.
மீதமுள்ள 16.28 சதவீத மின் தேவைக்காக நீண்டகால ஒப்பந்தப்படி, 5,007 மில்லியன் யூனிட், நடுத்தரகால ஒப்பந்தப்படி 3,723 மில்லியன் யூனிட், குறுகியகால ஒப்பந்தப்படி 6,185 மில்லியன் யூனிட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது. குறைந்த விலையுள்ள மின் நிலையங்களில் 2,829 மில்லியன் யூனிட்டும், அதிக விலையுள்ள மின் நிலையங்களில் 2,950 மில்லியன் யூனிட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய மின்தேவை நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக 632 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (டான்ஜெட்கோ) அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
வழக்கமாக கோடையில் மின்நுகர்வு அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மழை குறைவு மற்றும் வர்தா புயலினால் மரங்கள் வேறோடு சாய்ந்ததால் பூமியின் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால் மின்நுகர்வும் அதிகரித்துள்ளது. எனவே, கோடையில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க பிற மாநிலங்களில் இருந்து கூடுதலாக மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 672 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது 632 மெகாவாட் மின் சாரம் கொள்முதல் செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. தென்மாநிலங் களில் இருந்து ஒரு யூனிட் ரூ.4 என்ற விலைக்கு வாங்கப்படும். இதன்மூலம், கோடையில் மின் வெட்டு பிரச்சினையை சமாளிக்க முடியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.