தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலை. மருத்துவ மேற்படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலை. மருத்துவ மேற்படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ்) 562 இடங்கள், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) 19 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான முதல்கட்ட கலந் தாய்வு கடந்த 8-ம் தேதி முதல் 11- தேதி வரை நடைபெற்றது. இதில் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் மற்றும் பட்டயமேற்படிப்பில் 722 இடங்களும், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 17 இடங் களும் நிரப்பப்பட்டன. கலந் தாய்வு முடிவில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக உள்ளன.

மருத்துவ பட்டமேற்படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 42 இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நேற்று வெளியிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேர் இடம் பெற்றுள்ளனர். நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களின் இடங் களுக்கான தரவரிசைப் பட்டிய லில் 4,107 பேர் இடம் பிடித் துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,107 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in