

இலங்கை அருகே வங்கக் கடலில் சீன படைகள் அண்மைக்காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினருடன் இணைந்து சீன படையும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கும், குமரி கடலுக் கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது ஒரு சீன கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழகத்தை நோக்கி வந்தது. இதை இந்திய கடலோர காவல் படையினர் பார்த்து விட்டனர். உடனே அந்த கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை மீறி கப்பல் வந்தது. இதையடுத்து, கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு சீன கப்பலில் இருந்தவர்களும் திருப்பி சுட்டனர். கடுமையான துப்பாக்கி சண்டைக்குப் பின்னர் சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்டது. இதுபற்றி கடலோர காவல் படை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதற்கிடையே, சீன கப்பலில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக கோவா சென்றதாகவும், இதற்காக இந்திய எல்லைக்குள் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டதாகவும் இலங்கை விளக்கம் அளித்துள்ளது.