

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக் காக ரூ.4 கோடியே 41 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ்கள், 102 தாய்சேய் நல வாகனங்களை முதல்வர் கே.பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்புகள் ஏற்படு கின்றன. விபத்துகளைக் குறைக் கவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம், விபத்து சிகிச்சை, தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் தற்போது 855 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இந்த சேவை மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 12 லட்சத்து 13 ஆயிரம் கர்ப்பிணிகள் உட்பட 48 லட்சத்து 19 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். இச் சேவையை மேலும் மேம்படுத்த ரூ.3 கோடியே 55 லட்சத்தில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாக னங்களை முதல்வர் கே.பழனி சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
‘102’ சேவை
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள், ஒரு வயதுக்கு உட்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சை முடிந்த பிறகு அல்லது தடுப்பூசி அளிக்கப்பட்ட பிறகு இல்லத் துக்கு அழைத்துச் செல்லவும், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள் பவர்களை இல்லத்துக்கு அழைத் துச் செல்லவும் ‘102 தாய்சேய் நல வாகன சேவை’ திட்டம் கடந்த 2013-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 61 வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இச்சேவையை மேம்படுத்தும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய 10 மாவட்ட மருத்துவமனை களின் பயன்பாட்டுக்கு ரூ.86 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான 10 வாகனங்களின் சேவையையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
108 ஆம்புலன்ஸ், 102 தாய்சேய் நல வாகனங்களில் உள்ள வசதிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். இந்த வாகனங்களில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிபிஎஸ்) வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனம் இருக்கும் இடம் எளிதில் கண்டறியப்பட்டு, விபத்து பகுதிகளுக்கு உடனடியாக அனுப்ப முடியும்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.