

சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 208-க்கு விற்பனை ஆனது.
சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று உயர்ந்தது. இதனால், உள்ளூரில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 208-க்கு விற்கப்பட்டது.
22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 776-க்கு விற்பனையானது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 765-க்கு விற்கப்பட்டது.