

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தெரப்பி சிகிச்சை அளிக்கும் திட்டம் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப் பட்டது.
ஆட்டிசம் (மன இறுக்கம்) குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடக்க விழா, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் நேற்று மாலை நடந்தது. மருத்துவமனை இயக்குநர் ரவிச்சந் திரன் விழாவுக்கு தலைமை தாங் கினார். மருத்துவக் கல்வி இயக்கு நர் எட்வின் ஜோ முன்னிலை வகித் தார். சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக் கப்பட்ட 10 குழந்தைகளுக் கான சிகிச்சையை தொடங்கி வைத்தனர்.
அதன்பின் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியதாவது:
ஆட்டிசம் குறைபாடு என்பது ஒரு வளர்ச்சி குறைபாடு. இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பிறருடன் பழகுவது, பேசுவதில் குறைபாடு உள்ளவர் களாக இருப்பார்கள். இந்தியா வில் 70 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப் படுவதாக அறியப்படுகிறது. ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்து இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைப் பெற முடியாத நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு முதல் முறையாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆட்டிசம் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு குழந் தைக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தெரப்பி சிகிச்சைகள் அளிக்கப்படும். தற்போது இந்த மருத்துவமனையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களுக்கு விரிவுபடுத்தப்படும்.
இந்த சிகிச்சை முறையில் குறிப் பிட்ட இடைவெளியில் வாரந் தோறும் 2, 3 அமர்வுகளில் பேச்சு சிகிச்சை, தொழில் சிகிச்சை மற்றும் நடத்தை சிகிச்சை போன்றவை சம்பந்தப்பட்ட சிறப்பு டாக்டர்களால் வழங்கப்படும். இதில் உளவியல் மதிப்பீடும், மனநல மதிப்பீடும் சேர்க்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மன இறுக்கத்தை மதிப்பிடும் உளவியல் அளவு, சமூக முதிர்ச்சி அளவு ஆகிய அளவுகோல்கள் மூலம் குறைபாட்டின் தீவிரத்தன்மை மதிப்பிடப்படும்.