Published : 11 Feb 2023 06:39 AM
Last Updated : 11 Feb 2023 06:39 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பல இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் (எண்.12680), மைசூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12610) ஆகியவை வரும்14, 21-ம் தேதிகளில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த 2 ரயில்களும் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் (12679), சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607) ஆகியவை வரும் 14, 21-ம் தேதிகளில் சென்னைசென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த 2 ரயில்களும் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியில் இருந்து இயக்கப்படும்.
பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22652) வரும் 21-ம் தேதி திண்டுக்கல், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும். இதனால், கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், மல்லூர், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக செல்லாது. பயணிகளின் வசதிக்காக திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில் (22650) வரும் 21-ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12658) வரும் 21-ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் மெமூ விரைவு ரயில் (06735/36) வரும் 14, 21-ம்தேதிகளிலும், காட்பாடி - ஜோலார்பேட்டை மெமூ விரைவு ரயில் (06417/18) பிப்.11, 18, மார்ச் 4, 11-ம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, கேரள மாநிலம்அம்பலபுழா - திருப்புனித்துரா இடையே ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (12696) வரும் 16-ம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இதனால், இந்த ரயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாசேரி மற்றும் கோட்டயம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. இதற்கு பதிலாக ஆலப்புழாவில் நின்று செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT