

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலராக இருந்த ஏ. ராமலிங்கம் கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவராக இருந்தவர் ஏ.ராமலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பின், ஓ.பன்னீர்செல்வத்திடமும் செயல ராக பணியாற்றினார். முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்த பின், சட்டப்பேரவை அதிமுக தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தா ஷீலா நாயர் ஆகி யோர் பதவி விலகினர். அப்போது ஏ.ராமலிங்கமும் அப்பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.
அதன்பின் தற்போது வரை, முதல்வரின் செயலர்களாக ஷிவ் தாஸ் மீனா, விஜயகுமார் ஆகிய இருவர் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமலிங்கத்துக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலை மைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் அறிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக இருந்த மைதிலி ராஜேந்திரன் மாற்றப்பட்டு, பொதுத்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முன்னாள் செயலர் ஏ.ராமலிங்கம், கலை மற்றும் பண்பாட்டுக்கழக ஆணையராகவும், அருங்காட்சி யகங்கள் துறை ஆணையர் டி.ஜெகந்நாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.