Published : 11 Feb 2023 06:15 AM
Last Updated : 11 Feb 2023 06:15 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்துவதில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் தாறுமாறாக நிறுத் தப்படுவது, வணிகர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்ப டுத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து நகர்மன்றத் தலை வர் சுப்ராயலு உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் பயணிக ளுக்கு தடையாக உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, பயணிகள் பொதுமக்கள் அமர்வதற்கும், வந்து செல்வதற்கும் ஏதுவாக இருக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டு மஞ்சள் வண்ண கோடு ஏற்படுத்தப்படுத்தினர்.
தொடர்ந்து பேருந்து பயணிகள் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குஎளிதாக சென்று வருவதற்கும்பேருந்துகளை உரிய வழித்தடத் தில் நிறுத்துவதற்கும் பேருந்து களை உரிய இடத்தில் நிறுத்த முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பராமரிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT