இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு
Updated on
2 min read

மாணவர் சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தாத தனியார் சுயநிதி பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக் கீடு சேர்க்கை விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் தனியார் பள்ளி களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறு பான்மையினர் பள்ளிகள் நீங்க லாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடும்.

அவகாசம் முடிந்தது

இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்றுடன் (26-ம் தேதி) முடிவடைந்தது.

25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களை தனியார் பள்ளிகள் வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் உள்ளது.

இதுதொடர்பாக கேட்டபோது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி கூறியதாவது:

66 ஆயிரம் விண்ணப்பங்கள்

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளி கள் தவிர) நுழைவுநிலை வகுப்பு களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 இடங்கள் உள்ளன. 25-ம் தேதி மதியம் நிலவரப்படி, 66 ஆயிரத்து 436 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இடங்களை ஒதுக்கீடு செய்வதற் கான குலுக்கல் மே 31-ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு வாரத்துக் குள் சேர்க்கை தொடர்பான விவ ரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் தகவல்

தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரி விக்கப்படும். 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் வரும் இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக் கீடு செய்ய வேண்டியது தனியார் பள்ளிகளின் கடமையாகும். இந்த ஒதுக்கீடு சரியாக பின் பற்றப்படவில்லை என்றால் புகார் செய்யலாம். நர்சரி, பிரைமரி பள்ளிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், மெட்ரிக் பள்ளி களாக இருந்தால் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடமும் (ஐஎம்எஸ்) புகார் செய்ய வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

25 சதவீத இடஒதுக்கீடு தொடர் பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற முடியுமா என்று கேட்டபோது அவர் கூறியதாவது:

25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடுகிறது.

ரூ.124 கோடி வழங்க ஏற்பாடு

அந்த வகையில், 2015-16ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் ரூ.124 கோடியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின் றன. 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எத்தனை இடங்கள், அதில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், காலியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியும். இதற்கு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் தகவல் வழங் கும் அதிகாரிகளாகவும், மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் மேல்முறை யீட்டு அதிகாரியாகவும் செயல் படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விண்ணப்பத்தில் இடம்பெறவில்லையா?

பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறிப்பிட்ட தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும்போது ஆன்லைன் விண்ணப்பத்தில் அந்த பள்ளி இடம்பெறவில்லை என்றால், அப்பள்ளி சிறுபான்மை பள்ளி அல்ல என்பதை உறுதிசெய்துகொண்டு, சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரை அணுகி தங்கள் குழந்தையை அந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in