

கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், ''பாஜக அரசு தமிழகத்தில் தனது ஆக்டோபஸ் கால்களை வைக்க முயற்சிக்கிறது.
கோடநாட்டில் காவலாளி கொலை குறித்து தமிழக காவல்துறையால் உண்மையை வெளிக்கொணர முடியாது. சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியாகும்'' என்றார் திருமாவளவன்.