தமிழக உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

தமிழக உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Published on

காவிரியில் தமிழக உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சிக் கிறது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடுவர் மன்றம் நடுநிலையோடு செயல்பட்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதிமுக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்து, அரசியல் சாசன சட்ட அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

பாஜக தவிர்த்து பிற அரசியல் கட்சிகள் அனைத்தும் காவிரியில் தமிழக உரிமைக்காக போராடி உள்ளன.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, காவிரியில் தமிழக உரிமையை முற்றிலும் பறிக்க முயற்சிக்கிறது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in