Published : 10 Feb 2023 06:50 AM
Last Updated : 10 Feb 2023 06:50 AM

பழனிசாமி டெபாசிட் வாங்காவிட்டால் அதிமுகவை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்: வா.புகழேந்தி வலியுறுத்தல்

சென்னை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பழனிசாமி டெபாசிட் வாங்காவிட்டால் அதிமுகவை பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தினார்.

தன்னை பற்றி சமூக வலைதளங்களில், அவதூறு மற்றும் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா.புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், ‘சமூக வலைதளமான, ‘பேஸ்புக், ட்விட்டர்’வாயிலாக மர்ம நபர்கள், எனக்கு மிரட்டல் விடுத்து பதிவு வெளியிட்டனர். செல்போன் வாயிலாகவும் மிரட்டல் விடுத்தனர். ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதுாறு பரப்பி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறுகையில், ஓபிஎஸ் அணியில் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்து வருகிறேன். எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். சமூக வலைதளத்தில் என்னைப் பற்றியும், ஓபிஎஸ் குறித்தும் அவதூறாக எழுதுகிறார்கள்.

நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை. பாஜகவின் மீதும் பிரதமர் மீதும் மரியாதை உள்ளது. அதனால் ஒரு நட்புணர்வோடு உள்ளோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் வேட்பாளரை திரும்பப் பெற்றோம். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் ஓபிஎஸ்ஸை குறை சொல்லும் களமாக பழனிசாமி தரப்பினர் மாற்றி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதம் தோல்வியை தழுவினார் பழனிசாமி. தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளாத இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை அண்ணாமலை எந்த அடிப்படையில் குறிப் பிட்டுள்ளார் என்று தெரியவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் டெபாசிட் வாங்கவில்லை என்றால், அதிமுக தலைமை அலுவலக சாவி உட்பட அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் பழனி சாமி ஒப்படைக்க வேண் டும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x