Published : 10 Feb 2023 06:03 AM
Last Updated : 10 Feb 2023 06:03 AM
சென்னை: தமிழக மின்வாரிய செயலர் ஏ.மணிக்கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு தணிக்கைப் பிரிவினரின் ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகம் கொள்முதல் செய்யும் பொருட்கள், உபகரணங்கள், நிலக்கரி போன்றவற்றின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில், தரம் உத்தரவாதப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
கொள்முதல் செய்யப்படும் நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்து,அது தொடர்பான அறிக்கையைஉற்பத்திப் பிரிவு இயக்குநரிடம்,தரம் உத்தரவாதப் பிரிவு தலைவர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை ஆய்வு செய்வதற்கு நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் நிலக்கரியை ஆய்வுசெய்வதற்கு முதுநிலை வேதியியலாளர், இளநிலை வேதியியலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நிலக்கரி பிரிவில்பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதன் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிலக்கரி தரம் உத்தரவாதப் பிரிவுக்கு சுரங்கப் பிரிவு கண்காணிப்பு பொறியாளர் தலைமைவகிப்பார். அவருடன் செயற்பொறியாளர், 2 உதவி செயற்பொறியாளர்கள், முதுநிலை வேதியியலாளர், இளநிலை வேதியியலாளர் உள்ளிட்டோர் பிரிவுசார் பணிகளை மேற்கொள்வர்.
இவர்களுடன் தரவு உள்ளீட்டு அலுவலர்கள் 2 பேர் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். அவர்கள் நிலக்கரி ஆய்வு தொடர்பான தரவுகளைப் பதிவு செய்வர். இந்த நடைமுறையைப் பின்பற்றி நிலக்கரி தரம் உத்தரவாத பிரிவு அமைக்கப்படஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT