தாழ்வழுத்த தொழிற்சாலை பிரிவில் உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் 15%-ஆக குறைப்பு

தாழ்வழுத்த தொழிற்சாலை பிரிவில் உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் 15%-ஆக குறைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு உயரழுத்த மின்சாரமும், வீடுகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தாழ்வழுத்த மின்சாரமும் பல்வேறு கட்டண விகிதாச்சாரப்படி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது, சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தாழ்வழுத்த தொழிற்சாலை 3பி என்னும் பட்டியல்படி வழங்கப்படும் மின்சாரத்தை உச்சபட்ச நேரத்தில் பயன்படுத்தினால், 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதாவது 3பி கட்டண பட்டியல்படி மின்சாரம் பெற்றுள்ள நிறுவனங்கள் சாதாரண நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.50 என்னும் கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த மின்சாரத்தை உச்சபட்ச நேரமான இரவு 6 முதல்இரவு 9 மணி வரை பயன்படுத்தும்போது 25% கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனச் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதுகுறித்து மின்வாரிய தலைவரும் எரிசக்தித் துறைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த கடிதம் பரிசீலிக்கப்பட்டு, தற்போது தாழ்வழுத்த தொழிற்சாலை 3பி பிரிவில் உச்சபட்ச நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், 25 சதவீதத்துக்கு பதில்15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in