

பிளஸ் 2 தேர்வில் 292 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
பிளஸ் 2 தேர்வில் 6 ஆயிரத்து 732 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அந்த பள்ளிகளில் 1,813 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மொத்தமுள்ள 2,640 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 292 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளிகள் 82.30 சதவீதமும், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.65 சதவீதமும், சமூகநலத்துறை பள்ளிகள் 81.29 சதவீதமும், வனத்துறை பள்ளிகள் 96.37 சதவீதமும், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் 96.6 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 90.06 சதவீதமும், நகராட்சி பள்ளிகள் 87.20 சதவீதமும், அரசு பள்ளிகள் 86.87 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.56 சதவீதமும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 92.53 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன.