துணைவேந்தர்களை நியமிக்க வலியுறுத்தி அண்ணா பல்கலை. முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியினர் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அண்ணா பல்கலைக்கழகம், சென் னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக் கழகம் போன்றவை துணைவேந்தர் இல் லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிடப் போவதாக புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியினர் அறிவித்திருந்தனர். திட்டமிட்டபடி அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட நேற்று காலை 11 மணிக்கு அந்த அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் சாரதி தலைமையில் அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் அருகே திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற கோட்டூர் புரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இறுதியில் போராட் டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். மாலையில் அனைவரும் விடு விக்கப்பட்டனர்.
