

தமிழகத்தில் ஜிஎஸ்டி சட்ட முன் வடிவு, வரும் ஜூன் மாதம் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத் தப் படும் என நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித் துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 14-வது கூட்டம் காஷ்மீரில் நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சரும், ஜிஎஸ்டி வரிக் குழுவின் தலை வருமான அருண் ஜேட்லி தலை மையில் நடந்த இந்தக் கூட்டத் தில், தமிழகத்தின் சார்பில் நிதி யமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் ஜெயக் குமார் பேசியதாவது:
இதுவரை 14 மாநிலங்கள் மாநில ஜிஎஸ்டி தொடர்பான சட்டங் களை இயற்றியுள்ளன. ஜிஎஸ்டி தொடர்பான வரைவு சட்ட முன் வடிவை தமிழகம் தயார் நிலையில் வைத்துள்ளது. ஜூன் மாதம் சட்டப் பேரவையில் இது அறிமுகப்படுத் தப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.