“ஹெல்மெட் அணியுங்கள்...” - விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

ஹெல்மேட் அணிந்து  வாகனத்தை ஓட்டிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
ஹெல்மேட் அணிந்து வாகனத்தை ஓட்டிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்குவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்து, அவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தஞ்சாவூர் ரெட்கிராஸ் சொசைட்டி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பிள்ளையார்பட்டியில் முடிவடைந்தது. இப்பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று, விபத்தில்லாபயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்குவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.

இதில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் மருத்துவர் வரதராஜன், மாவட்ட துணை சேர்மன் முத்துக்குமார், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in