லாரி கவிழ்ந்து மது பாட்டில்கள் சேதம்

லாரி கவிழ்ந்து மது பாட்டில்கள் சேதம்
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகேயுள்ள தேவேரியம்பாக்கம் பீர் தொழிற்சாலையில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று காலை திருநெல்வேலி புறப்பட்டது. செங்கல்பட்டு-வாலாஜாபாத் சாலையில் ஆத்தூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் மற்றும் கிளீனருக்கு காயம் ஏற்பட்டது. ஓட்டுநர் முத்தழகன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். லாரி கவிழ்ந்ததில் மதுபாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின.

இதில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட் டில்கள் உடைந்து நாசமாயின. தகவல் அறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சேதமான மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர். பின்னர் கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் தூக்கி போக்குவரத்தை சீர் செய்ததோடு, மீதமிருந்த மதுபாட்டில்களை வேறு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in