மாடு விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் எதற்காக?- தமிழிசை விளக்கம்

மாடு விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் எதற்காக?- தமிழிசை விளக்கம்
Updated on
1 min read

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே மாடு விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர்.

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்க பாஜக அரசு தடைவிதித்து இருப்பது தலித் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல் என்றும், மனித உரிமையை பறிக்கும் அறிவிப்பு என்றும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், ''சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே மாடு விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாட்டிறைச்சி தடைக்கும், மிருகவதைக்கும் திமுகவினருக்கு வித்தியாசம் தெரியவில்லை. இதை மதம் சார்ந்த திட்டம் என கூறுவது தவறு'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in