Published : 20 May 2017 08:10 AM
Last Updated : 20 May 2017 08:10 AM

பூங்கா நகர் - சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை ஓரிரு நாட்களில் திறப்பு

பூங்கா நகர் ரயில் நிலையத்தி லிருந்து சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையம் செல்ல பிரம் மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 50 மீட்டர் சுரங்கப்பாதையை திறக்க நேற்று ஒத்திகை நடத்தப்பட் டது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்த சுரங்கப்பாதை மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் கீழே, 70 ஆயி ரத்து 60 சதுர அடி பரப்பளவில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் ரூ.400 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரு கிறது. சுரங்கம் வழியாக கோயம் பேடு, எழும்பூர் வழியாக வரும் மெட்ரோ ரயில் முதல் தளத்திலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரயில் 2-வது தளத்திலும் வந்து இணைந்து அண் ணாசாலை வழியாக பரங்கிமலை செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மெட்ரோ ரயில் பணிக்காக பூங்கா ரயில் நிலையம் அருகே ஏற்கெனவே இருந்த பழைய சுரங் கப்பாதை மூடப்பட்டது. மேலும், இதற்கு மாற்றாக பூங்கா ரயில் நிலையம் அருகில் இருந்து சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் முன்பு வரையில் தற்காலிகமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக் கப்பட்டது. நடை மேம்பாலம் உயரமாகவும் பெரிய படிகளைக் கொண்டதாகவும் உள்ளதால் முதியோர், மாற்றுத் திறனாளிகள் இதில் ஏற சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் பூங்கா நகர் ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையம் செல்ல 9 மீட்டர் அகலத்தில் சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு பிரம் மாண்டமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்க வுள்ள நிலையில், அதிகாரிகள் நேற்று மாலையில் ஒத்திகை பார்த்தனர். அடுத்த ஓரிரு நாட்களில் இது திறக்கப்படவிருக்கிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரூ.400 கோடி செலவில் பிரம்மாண்டமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின் றன. மெட்ரோ ரயில் பணிக்காக ஏற்கெனவே இங்கிருந்த சுரங்கப் பாதை அகற்றப்பட்டது. தற்போது, புதியதாக 9 மீட்டர் அகலத்தில் சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது இதில், பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப் பட்டுள்ளது. பிறகு மக்கள் இந்த சுரங்கப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சுரங்கப் பாதையின் மற்றொரு புறத்தில் இருக்கும் நிலுவை பணிகளையும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x